சங்ககிரி அருகே சங்ககிரி ஆர்.எஸ். எப்.சி.சி.எம். குழுவின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. இப் போட்டியில் ஈரோடு அணி முதலிடம் பெற்றது.
சங்ககிரி ஆர்.எஸ்.ஸில் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மெம்பர்கள் அமைப்பு சார்பில் 20 -20 கிரிக்கெட் போட்டி மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி நிறைவு பெற்றது.
இப் போட்டியில் ஈரோடு வெஸ்ட் சச்சின் சிசி அணி முதலிடத்திலும், நாமக்கல் விக்டோரி சிசி அணி 2-ஆவது இடத்தையும், சங்ககிரி எஸ்.ஆர்.டி.சி. அணி 3-ஆவது இடத்தையும், சங்ககிரி ஆர்.எஸ். எப்.சி.சி.எம். அணி 4-ஆவது இடத்தையும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம். குமாரசாமி ரொக்கப் பரிசு, சுழற்கோப்பையை வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 50 ஆயிரமும், 2-ஆவது பரிசாக ரூ. 30 ஆயிரம், 3-ஆவது பரிசாக ரூ. 20 ஆயிரம், 4-ஆவது பரிசாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டன. சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கேபிஆர். செல்வராஜ், பொருளாளர் என்.மோகன்குமார், இணைச் செயலர் எம். சின்னதம்பி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், எப்.சி.சி.எம். குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

