ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ரூ. 1 கோடி மதிப்பிலான தார்ச் சாலை அமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.
ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில், பச்சனம்பட்டி, செட்டியப்பனூர் ஆகிய கிராமங்களில் தார்ச் சாலைகள் மற்றும் ஜல்லி சாலைகள் பழுதடைந்து காணப்பட்டன.
சாலைகளைச் சீரமைத்துக் கொடுக்குமாறு இப்பகுதி மக்கள் ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்து இருந்தனர். இதையடுத்து, பழுதடைந்த கிராம சாலைகளை புதுப்பிக்க எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார்.
இதனால் பனங்காட்டூரில் ஜல்லி சாலை, மோட்டூரில் தார் சாலை, பச்சனம்பட்டியில் தார் சாலை என பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கும் பணிகளின் தொடக்க விழா அந்தந்த கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் ஓமலூர் எம்.எல்.ஏ வெற்றிவேல் கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். கிராம சாலைகள் மிகவும் தரமாக பல ஆண்டுகள் பழுதடையாமல் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு எம்.எல்.ஏ வெற்றிவேல்
ஆலோசனைகள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செட்டியப்பனூரில் புதிய ரேசன் கடை கட்டுவதற்கான பணிகள் துவக்க விழாவும் நடைபெற்றன. இந்தப் பணியையும் கிராம மக்கள் முன்னிலையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் வெற்றிவேல் துவக்கி வைத்தார்.
விழாவில் முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அசோகன், பச்சியப்பன், நிர்வாகிகள் தளபதி, ராஜேந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

