போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை திரும்பப் பெற கோரிக்கை

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வைத் திரும்ப பெற வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் எம்.ஆர். குமாரசாமி  கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On :14 மே 2018, 9:07 pm

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வைத் திரும்ப பெற வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் எம்.ஆர். குமாரசாமி  கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலக அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறி, இறங்கி கொண்டிருந்த சமயத்தில் பெட்ரோல்-டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்யவில்லை.
கர்நாடக மாநிலத் தேர்தல் முடிவடைந்தவுடன் தற்போது உள்ள டீசல் விலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சுமார் 23 காசுகள் என்ற அளவில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன.
இந்த விலை ஏற்றத்தினால் எங்களது தொழில் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் எங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். எங்களது வருவாயில் டீசலுக்கு மட்டும் 65 சதவீதம் செலவாகின்றன. அதற்கு மேல் சுங்கச் சாவடி, சோதனைச் சாவடி உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் செலவாகி வருகின்ற நிலையில் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே, டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.
வருகின்ற மே 17-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் டீசல் விலை ஏற்றம், காப்பீடு தொகை உயர்வைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி அத்துறைகளுக்கு அழுத்தம் தர உள்ளோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.