சங்ககிரியில் திங்கள்கிழமை பகலில் வெப்பம் அதிகரித்து இரவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியவுடன் காற்று, இடியுடன் கூடிய மிதமான மழை இரவு ஒரு மணி நேரம் பெய்தது. .
மழையினால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே கழிவு நீர் சாக்கடை சரியாக செப்பனிடாததால் மழை நீருடன், சங்ககிரி நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் தேங்கி நின்றது. தேங்கி நின்ற கழிவு நீரால் வாகனங்கள் மெதுவாகச் சென்றன.
இருசக்கர வாகன ஓட்டிகள் நீருக்குள் சிக்கியதால் வண்டிகளை ஓட்ட முடியாமல் தவித்தனர். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்துக்கு அருகில் உள்ள பெட்டிக் கடை முன் புதைக்குழி சாக்கடை உள்ளது. அதைத் தெரியாமல் பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் அப்பகுதியில் சென்றவர்களை உணவகத்தில் நின்று கொண்டிருந்த சமூக ஆர்வலர்கள் சப்தமிட்டு அவர்களை காப்பாற்றி வேறு பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் அவதி
சங்ககிரி பழைய பேருந்து நிலைய பயணிகளும் இரவு திடீரென பெய்த மழையினால் ஒதுங்குவதற்கு இடமில்லாமலும், அப்பகுதியில் சாக்கடைகள் எந்தப்பகுதியில் இருப்பது என்று தெரியாமல் சிரமத்திற்குள்ளாகினர். பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் இருந்த பொருட்கள் மழைநீருடன்கூடிய கழிவு நீர் அடித்து வந்ததால் நீரில் மிதந்து சென்றன. அப் பொருள்கள் சாலையின் மையப் பகுதியில் மிதந்ததால் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக இருந்தன.எனவே, சங்ககிரி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழற்குடை அமைத்து கழிவுநீர் வடிகால் அமைத்து தருமாறு பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை
விடுத்தனர்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை 2 மணி நேரம் இடி,மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இரவிலும் தொடர்ந்து லேசான மழை பெய்தபடி இருந்தது.
தம்மம்பட்டியில் கடந்த சில நாள்களாக பொதுமக்களை வெயில் வாட்டி வதைத்த நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8மணி பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாதப் பலன்கள் - விருச்சிகம்

மே மாதப் பலன்கள் - துலாம்

மே மாதப் பலன்கள் - கன்னி

இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

