புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கிருஷ்ண ஜயந்தி கொண்டாட்டம்

கிருஷ்ண ஜயந்தியையொட்டி, சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீகண்ணபிரான் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On :3 செப்டம்பர் 2018, 4:01 am

கிருஷ்ண ஜயந்தியையொட்டி, சங்ககிரியை அடுத்த நாட்டாம்பாளையம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீகண்ணபிரான் சுவாமிக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 சங்ககிரி வட்டார யாதவா சங்கத்தின் சார்பில் பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. கோயில் வளாகத்தில் அரிசி மாவினால் குழந்தைகளின் கால் தடம் பதியப்பட்டு கிருஷ்ணர் குறித்த பக்திப் பாடல்களை பக்தர்கள் பாடினர். உற்சவ மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் சப்பரத்தில் வைத்து சுற்றி வந்தனர். முன்பாக குழந்தைகள் கண்ணன் வேடமிட்டு நடந்து சென்றனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.விழாக்குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
 ஆத்தூரில்...
 ஆத்தூர் தாயுமானவர் தெருவில் உள்ள திரெüபதி அம்மன் கோயிலில் நவநீதகிருஷ்ணன் சுவாமி சன்னதியில் கோகுலாஷ்டமி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பஜனை, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். துளுவ வேளாளர் மகாஜன மன்றத் தலைவர் எஸ்.அருணாசலம், செயலாளர் ஏ.திருநாவுக்கரசு,திருப்பணிக்குழுத் தலைவர் ஆர்.வசந்தன், துணைத் தலைவர் எஸ்.பழனிசாமி, விஜயராம் அ.கண்ணன், அறங்காவலர்கள் ஏ.ராஜாராம், கே.மாரிமு த்து, சி.ஆறுமுகம், பெரியதனக்காரர்கள் எஸ்.ஆர்.ஜெயராமன், சாரட் ராமன் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.