ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க முதல்வரிடம் கோரிக்கை

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென, முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 4:03 am

வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென, முதல்வர் எடப்பாடி கே பழனிசாமியிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களின் சார்பில், சமத்தும மக்கள் கட்சி நிர்வாகி வாழப்பாடி ஜவஹர், தமிழக முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
 வாழப்பாடி பேரூராட்சி, 200 - க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி, அருநுôற்றுமலை, கல்வராயன்மலை கிராமங்கள், தருமபுரி மாவட்டம், சேலூர், வேலனூர், பாலக்குட்டை, நாமக்கல் மாவட்டம் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி பகுதி கிராம மக்களுக்கும் முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
 இங்குள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்று, இளநிலை கலை மற்றும் அறிவியல் பட்டம் பயில விரும்பும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர், சேலம், ஆத்துôர், ராசிபுரம், தலைவாசல், திருச்செங்கோடு பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
 நீண்ட நேரம் பயணிக்க வேண்டியுள்ளதால், குறித்த நேரத்துக்கு கல்லூரிக்கு சென்று வீடு திரும்ப முடியாமலும், தனியார் கல்லூரிகளுக்கு கட்டணம் செலுத்த முடியாமலும் வாழப்பாடி பகுதி கிராமப்புற மாணவ, மாணவியர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ- மாணவியரின் பட்டம் பெறும் எண்ணம் நிறைவேறாமல் கனவாகவே முடிந்து விடுகிறது.
 எனவே இப்பகுதி மாணவ, மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்களும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 இந்நிலையில், ஏற்காடு தொகுதிக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக வாழப்பாடிக்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் 6 ஆண்டுகள் கடந்தும் இத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
 எனவே, வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மாணவ-மாணவியரின் நலன் கருதி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதுகுறித்து அவர் கூறியது:
 வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. வாழப்பாடி , முத்தம்பட்டி, பொன்னாரம்பட்டி, காட்டுவேப்பிலைப்பட்டி கிராமங்களில் சாலை வசதிகளுடன், கல்லூரி அமைப்பதற்கு தேவையான அளவில் அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
 கல்லூரிக்கு பொருத்தமான நிலத்தை தேர்வு செய்து, நிதி ஒதுக்கீடு பெற்று கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஓராண்டுக்கு மேலாகும் என்பதால், வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதலாக இருக்கும் கட்டடங்களின் ஒரு பகுதியில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ், உறுப்புக்கல்லூரியை எதிர் வரும் கல்வியாண்டில் திறந்தால், நுôற்றுக்கணக்கான கிராமப்புற மாணவ-மாணவியர் பயன் பெறுவர் என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.