16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

சங்ககிரி அல்லிகுண்டம்  மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சங்ககிரி வாணியர் காலனி ஸ்ரீ மகா கணபதி,  நாகக்கன்னி,  அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :

சங்ககிரி வாணியர் காலனி ஸ்ரீ மகா கணபதி,  நாகக்கன்னி,  அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. 
சங்ககிரி, வாணியர் காலனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மகா கணபதி, நாகக்கன்னி, அல்லிகுண்டம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக  ஹோமம், விநாயகர் பூஜை,  மாலையில் வாஸ்து சாந்தி, முதல் காலயாக சாலை பூஜைகள் நடைபெற்றன.  இதனையடுத்து  புதன்கிழமை காலை கோபுரக் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர்.  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பட்டக்காரர், ஊர்கவுண்டர் மற்றும் கும்பாபிஷேக விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.