
சேலம் அருகே கார் மீது வேன் மோதியதில் பாதிரியார் உயிரிழந்தார்.
சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெபமணி மகன் ஆதம் ராஜா பிலிப் (35). இவர் சிவதாபுரத்தில் உள்ள திருச்சபையில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
இவர் செவ்வாய்க்கிழமை (செப்.11) வாடகை காரில் ஈரோட்டுக்குச் சென்று விட்டு புதன்கிழமை சேலத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை சேலம் நெத்திமேடு மணியனூரைச் சேர்ந்த விஜய் (34) ஓட்டி வந்துள்ளார்.
அப்போது சேலத்தில் இருந்து கோவை நோக்கிச்சென்று கொண்டிருந்த வேனை பரமத்தி வேலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (30) ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அரியானூர் அருகே கடத்தூர் பிரிவு சாலையில் வேன் சென்ற போது, குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க வேனை ஓட்டுநர் திரும்பியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவில் உள்ள தடுப்பின் மீது ஏறி எதிர்சாலையில் வந்து கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த பாதிரியார் ஆதம் ராஜா பிலிப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் விஜய் காயமடைந்தார். பாதிரியாருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவி உள்ளார்.
இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இடைத்தோ்தலில் போட்டி: தோ்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சாஸ்த்ரா பல்கலைக்கழக நில விவகாரம்! தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!




