தினமணி நாளிதழ் சார்பில் நடைபெற்ற ஆரோக்கியம் இலவச மருத்துவக் கண்காட்சியில் ஒரே இடத்தில் அனைத்து வித நோய்களுக்கான மருத்துவர்களைச் சந்தித்து தீர்வு பெற முடிகிறது என பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தினமணி நாளிதழ் மற்றும் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து 5-ஆம் ஆண்டாக நடத்திய ஆரோக்கியம் இலவச மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை (பிப்.23) துவங்கியது. இக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இ.சி.ஜி. - எக்கோ பரிசோதனை, பல் பரிசோதனை, கண் பரிசோதனை, எலும்பு மூட்டு சிகிச்சை ஆலோசனைகள், ரத்த தான முகாம், தைராய்டு சோதனை போன்ற பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 500 பேர் இலவச பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதுதவிர, 1,500-க்கும் மேற்பட்டோர் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
மருத்துவக் கண்காட்சியில், ஒரே இடத்தில் மருத்துவர்களைச் சந்தித்து உடலில் ஏற்படும் அனைத்து உபாதைகளுக்கும் தீர்வு பெற முடிகிறது என்று பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.
தினமணி மருத்துவக் கண்காட்சியில் மக்கள் கருத்து
தினமணி நாளிதழ் 5-ஆம் ஆண்டாக நடத்தும் இந்த இலவச மருத்துவக் கண்காட்சி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.
மருத்துவ அரங்குகளில் உள்ள மருத்துவர்கள் மக்களுடன் மிகவும் ஒத்துழைத்து நோயாளிகளுக்கு நல்ல முறையில் ஆலோசனைகளை வழங்கினர்.
குறிப்பாக, 50 வயதுக்கு மேலானவர்கள் தினசரி கடைப்பிடிக்க வேண்டிய உணவு முறை குறித்தும் மருத்துவர்கள் தெளிவாக விளக்கினர்.
நாட்டு மருந்துக் கடை அரங்கில் விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால், மக்கள் அதிகளவு பொருள்களை குறைந்த விலையில் வாங்கினர்.
சேலம் பழைய பேருந்து நிலையப் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வருவாய் ஆய்வாளர் ஷாநவாஸ் (70)
நீண்ட நாள்களாக நான் கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தேன்.
ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் கடினமாக இருந்தது.
ஆனால் தற்போது, இந்தக் கண்காட்சியின் மூலம் மருத்துவரை எளிதில் சந்தித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற முடிந்தது. மேலும், முழங்கால் வலிக்கு தினசரி மேற்கொள்ள வேண்டிய பயிற்சி குறித்தும், மூட்டுவலிக்கு பயன்படுத்தக்கூடிய தைலம் குறித்தும் மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.
ஜங்ஷன் பகுதி, ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர் சுப்பிரமணியன் (80)
அலோபதி, சித்தா ஹோமியோபதி, ஆயூர்வேதம் போன்ற அனைத்து மருத்துவ முறைகள் குறித்து பல்வேறு அரங்குகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருப்பதால், பொதுமக்களிடையே மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.
இலவசமாக ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்த சர்க்கரை பரிசோதனைகள் செய்யப்படுவதால், ஏழை மக்கள் பெரிதளவு பயனடைகிறார்கள். மேலும், அரங்குகளில் விற்பனை செய்யப்படுகின்ற புத்தகங்களும் மிக குறைந்த விலையில் பெற முடிகிறது.
அம்மாபேட்டை, கல்லூரி மாணவி சஷ்டிகா (20)
வசதியற்ற மக்களினால் ஈ.சி.ஜி.-எக்கோ கார்டியோகிராம் போன்ற பரிசோதனைகளை அதிகளவு பணம் செலவு செய்து மேற்கொள்ள இயலாது. இதுபோன்ற இலவச மருத்துவ பரிசோதனைகளின் மூலம் பெரிதளவு பயன் ஏற்பட்டுள்ளது என்றார்.
அஸ்தம்பட்டி விவசாயி தேவராஜன் (52)
கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரங்குகளையுமே பார்வையிட்டேன். நீண்ட நாட்களாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தேன். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பல் வலிக்கு சிகிச்சை பெற அதிகளவு பணம் செலவாகிறது.
எனவே, சிகிச்சையைத் தொடர இயலவில்லை. ஆனால், இதுபோன்ற மருத்துவக் கண்காட்சிகளில் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்று மருந்துகள் பெறுவதால், செலவு பெரிதளவு குறைகிறது என்றார்.
மேச்சேரி, இல்லத்தரசி சின்னம்மாள் (70)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
