மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக ஆறாம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், மேச்சேரியில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் ஆலயம் உள்ளது. பல நூறு ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா 2013-ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் கும்பாபிஷேக நிறைவு விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மாகா கும்பாபிஷேக விழாவின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா புதன்கிழமை நடத்தப்பட்டது.
செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு மஹாகணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி நிகழ்ச்சிகளும், பிற்பகல் 3 மணிக்கு நாதஸ்வர வித்வான்களின் நாதஸ்வர, தவிலிசை நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு சிலம்பாட்ட நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு இன்னிசை பாட்டு பட்டிமன்றமும்
நடைபெற்றது.
புதன்கிழமை காலை 7 மணிக்கு மஹாகணபதி ஹோமம், லலிதாசகஸ்ரநாமம், 108 வலம்புரி சங்காபிஷேகமும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேச்சேரி ஆதிபராசக்தி மன்றங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
பிற்பகலில் அன்னதானமும், மாலை 5 மணிக்கு மேளவாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலாவும் நடைபெற்றது. இரவு திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற நட்சத்திர இசைக் கொண்டாட்டம்
நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


