விநாயகா மிஷின் பல்கலைக்கழகத்துக்குகல்வி சேவைக்கான  விருது

விநாயகா மிஷின் பல்கலைக்கழகத்துக்கு கல்வி சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 

விநாயகா மிஷின் பல்கலைக்கழகத்துக்கு கல்வி சேவைக்கான விருது வழங்கப்பட்டது. 
டைலாக்  இந்தியா என்ற மாத இதழ், கடந்த 4 ஆண்டுகளாக  கல்வியியல் மாநாடுகளை நடத்தி,  பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து, கெளரவப்படுத்தி வருகிறது.  இந்த ஆண்டுக்கான கல்வியியல் மாநாடு மே 2 ஆம் தேதி துபையில் நடைபெற்றது.  இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் உயர்கல்வி நிறுவனங்கள்,   வணிக அமைப்புகள், கல்விசார் சங்கங்கள் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதே ஆகும்.  இதில் சேலம் விநாயகா மிஷினின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, "  உலகளாவிய முன்னோக்குப் பார்வையில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உயர் கல்வி நிறுவனங்கள்'  என்ற தலைப்பின் கீழ்  கருத்துரையாற்றினார்.   மேலும்,  இதில் இந்திய தூதரக அதிகாரி ஸ்ரீ விபுல், வணிக-வர்த்தகத் தலைவர் ஷடாஃப்,  பல்வேறு தனியார் பல்கலைக்கழகத்தினர்,  கல்லூரிகள்,  அரசுத் துறை சார்ந்த கல்வியாளர்களும்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 
இந் நிகழ்ச்சியில்,  விநாயகா மிஷின் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்துக்கு மிகவும் மேம்பட்ட மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தென் இந்தியாவின் சிறந்த தரம் வாய்ந்த நிலையான கல்விச் சேவைக் குழு என்ற விருதும்,  அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் செந்தில்குமாருக்கு  "மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் ஆலோசனைக்கான விருது' வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com