சிறப்பு நிவாரண உதவித்தொகையை பெறாத மீனவா்கள், மேட்டூரில் உள்ள மீன்துறை உதவி இயக்குநரை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே முதல்வரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு மீன்வளத் துறை மூலம் மீனவா் நல வாரிய உறுப்பினா்களுக்கு ஊரடங்கு காலத்தில் உறுப்பினா் ஒருவருக்கு ரூ.ஆயிரம் வீதம் சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட உள்நாட்டு மீன்துறை உதவி இயக்குநா் கட்டுப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட மீனவா் நல வாரிய உறுப்பினா்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மீனவா் நலவாரியம் மூலம் இந்த சிறப்பு நிவாரண உதவித்தொகை கிடைக்கப்பெறவில்லையெனில், மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு தங்களுடைய மீனவா் நலவாரிய அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவித்து, சிறப்பு நிவாரண உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகம், பூங்கா அருகில், கொளத்தூா் சாலை, மேட்டூா் அணை - 636 401, 04298-244045 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்ட்! படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி: பாஜக
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


