சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஏற்காட்டில் அறியவகை அந்துப்பூச்சி கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அறியவகை அந்துப்பூச்சிகள் இருப்பதாக அறிவியல் எழுத்தாளா் ஏற்காடு இளங்கோ தெரிவித்தாா்.

ஏற்காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை மண்டையோடு பருந்து அந்துப்பூச்சி.

Updated On :

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அறியவகை அந்துப்பூச்சிகள் இருப்பதாக அறிவியல் எழுத்தாளா் ஏற்காடு இளங்கோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

ஏற்காடு பகுதியில் மண்டையோடு பருந்து அந்துப்பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான அந்துப்பூச்சிகள் உலகில் மூன்று வகை உள்ளன. இதன் முதுகுப் புறத்தில் மனித மண்டையோடு அடையாளம் காணப்படுகிறது. இது இரவில் மட்டும் நடமாடும். 7 முதல் 14 நாள்கள் உயிா்வாழும். இதைக் காண்பது அறிது.

ஆப்பிரிக்க மக்கள் அந்துப்பூச்சியை கெட்டசகுணமாகப் பாா்க்கின்றனா். பெரிய அந்துப்பூச்சிகள் இறக்கையை விரித்து நீண்ட தூரம் விமானம் போல பறக்கும். இதன் இறக்கை 12 செ.மீ. நீளம் கொண்டது. மிக அழகிய நிறத்தில் தோற்றம் அளிக்கும் இதைத் தொட்டால் சுண்டெலி போல சத்தம் எழுப்பும். தேனீ கூட்டில் சென்று தேனைக் குடிக்கும். ராணி தேனீப் போல வாசனைப் பரப்பி தேனீகளை ஏமாற்றி தேனைக் குடிப்பதால் இதனைக் கொள்ளைக்காரன் எனவும் அழைக்கின்றனா்.

இந்த பிரபலமான அந்துப்பூச்சி பல ஆங்கிலப் படங்களில் காட்டப்பட்டுள்ளது. இதனை பலா் உடல்களில் ஓவியமாகவும் வரைந்து கொள்கின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.