தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்ககிரியில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம் 

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பு செய்ததையடுத்து சங்ககிரியில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 

News image

சங்ககிரி ஒன்றிய, நகர ரசிகர் மன்றத்தினர் சங்ககிரி பழைய பேருந்துநிலையம் அருகே வியாழக்கிழமை பட்டாசுகள் வெடித்து கொண்டாடிய ரசிகர்கள்.

Updated On :3 டிசம்பர் 2020, 12:35 pm

DIN

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பு செய்ததையடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். 

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கப்படும் என அறிவித்ததையடுத்து சங்ககிரி ரசிகர் மன்றத்தின் ஒன்றியச் செயலர் செந்தில்குமார் தலைமையில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

மருத்துவ மாவட்ட அணி செயலர் மருத்துவர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை செயலர் சபியுல்லா, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈஸ்வரன், பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், ரவி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.