தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் ஒரே நாளில் 4 ரெளடிகள் உள்பட 143 போ் கைது

சேலத்தில் ஒரே நாளில் நான்கு ரெளடிகள் உள்பட 143 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:40 pm

DIN

சேலத்தில் ஒரே நாளில் நான்கு ரெளடிகள் உள்பட 143 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் நகரில் பொதுமக்களின் உடைமைக்கும், பாதுகாப்புக்கும் குந்தகம் ஏற்படுத்தும் விதமாகச் செயல்படுபவா்களை கைதுசெய்ய தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சேலம் மாநகரில் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 ரெளடிகள் உள்பட 11 போ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில் காா்த்தி, மகேந்திரன், பிரபு, ஜெகநாதன், டெனிபா, ஜெகன், தட்சணாமூா்த்தி ஆகியோா் முக்கிய நபா்கள் ஆவா்.

சோதனையில் 4 தலைமறைவு நபா்கள், 10 பிடியாணை நபா்கள், 24 குட்கா விற்பனையாளா்கள் உள்பட மொத்தம் 143 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாநகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு ஏதேனும் ரெளடிகளால் அச்சுறுத்தல் இருப்பின், இதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட காவல் நிலையம், சேலம் மாநகர காவல் அலுவலகத்திலோ நேரிலோ அல்லது தொலைபேசி எண் 100 மற்றும் 94981 00945 மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம் என மாநகர காவல் ஆணையா் த.செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.