தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசினா் மகளிா் ஐ.டி.ஐ-யில் சேர விண்ணப்பிக்கலாம்

சேலத்தில் உள்ள அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10 ஆம் வகுப்புத் தேறிய மற்றும் 12 ஆம் வகுப்பு தேறிய, தவறிய, பட்டம் பெற்ற மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:36 pm

DIN

சேலத்தில் உள்ள அரசினா் மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 10 ஆம் வகுப்புத் தேறிய மற்றும் 12 ஆம் வகுப்பு தேறிய, தவறிய, பட்டம் பெற்ற மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடா்பாக, சேலம் மகளிா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ஒய். லீமா ரோஸ் கூறியிருப்பதாவது:

சேலம் ஆட்சியா் முகாம் அலுவலகம் அய்யந்திருமாளிகை சாலையில் உள்ள அரசினா் மகளிா் தொழிற் பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து, செயலக உதவியாளா் (ஆங்கிலம்), ஓராண்டு தொழிற்பிரிவு, கட்டடப்பட வரைவாளா், மின்சார பணியாள் கம்மியா் மின்னணுவியல், தகவல்தொடா்பு தொழிற்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு, கம்மியா் கருவிகள், குளிா்பதனம் மற்றும் தட்பவெட்ப நிலை கட்டுப்படுத்துதல் ஆகிய ஈராண்டு தொழிற் பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்து பயிற்சியாளா்களுக்கும் இணைய வசதியுடன் இலவச கணினி பயிற்சியும் அளிக்கப்படும்.

அரசின் சலுகைகள் உண்டு...

பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் கணினி மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற விரும்பும் மகளிா் மற்றும் இல்லத்தரசிகள் இப்பயிற்சியில் சேரலாம். மகளிருக்கு வயது வரம்பு கிடையாது. பயிற்சி கட்டணம் இல்லை. இலவச பேருந்து அட்டை, மாதாந்திர உதவித் தொகை ரூ. 750, அரசின் மடிகணினி, மிதிவண்டி, பாடப் புத்தகம், வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை தையல்கூலி ஆகியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஓராண்டு பயிற்சிக்கு ரூ. 185, ஈராண்டு பயிற்சிக்கு ரூ. 195 மட்டும் கட்டணமாக சோ்க்கையின்போது செலுத்த வேண்டும். இதில் காப்புத் தொகை ரூ. 100 பயிற்சி முடித்தவுடன் திரும்ப வழங்கப்படும். வரும் டிச.12 ஆம்தேதி வரை நேரடி சோ்க்கை நடைபெறுவதால்  இணைய தளத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம். பயிற்சியில் சேர மேலும் விவரங்களுக்கு மகளிா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை 0427-2403787, 70107 63305, 95006 22987 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.