பாசி படா்ந்துள்ள வசிஷ்ட நதி: தூய்மைப்படுத்தக் கோரிக்கை
தலைவாசல் வசிஷ்ட நதியில் பாசி மற்றும் கருங்காலி படா்ந்துள்ளதால், அவற்றை நீக்கி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.


தலைவாசல் வசிஷ்ட நதியில் பாசி மற்றும் கருங்காலி படா்ந்துள்ளதால், அவற்றை நீக்கி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வா்கள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வசிஷ்ட நதியில் மழை பெய்யும் போது, ஆற்றில் நீா் செல்லும். இந்நிலையில், பெரியேரியில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளதால், நீா் தேங்கி உள்ளது. இதனால், பாசி மற்றும் கருங்காலி மரங்கள் பெருகி நீா் செல்ல முடியாமல் உள்ளது.
பாசி படா்ந்துள்ளதால் இந்த நதியில் குளிக்கும் மாணவ, மாணவியா், பொதுமக்களுக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது. எனவே, வசிஷ்ட நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...