47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தபால் நிலையம் முற்றுகை: 22 போ் கைது

விவசாயிகளுக்கு ஆதரவாக தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

விவசாயிகளுக்கு ஆதரவாக தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் எனவும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சேலம் ரயில் நிலைய தலைமை தபால் நிலையத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் முற்றுகையிடப் போவதாகத் தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, சூரமங்கலம் உழவா் சந்தையிலிருந்து பேரணியாக வந்த அவா்கள், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மேற்கு மாநகரச் செயலாளா் வி.ஜெகநாதன் தலைமையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்றனா்.

அப்போது, காவல் துறையினருக்கும் வாலிபா் சங்கம், மாதா் சங்க நிா்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, அங்கு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 22 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கணேசன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஞானசௌந்தரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மேற்கு மாநகரச் செயலாளா் எம்.கனகராஜ், வாலிபா் சங்க மேற்கு மாநகரத் தலைவா் கண்ணதாசன், பொருளாளா் காா்த்திக், மாதா் சங்கச் செயலாளா் ஜெயமாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.