47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சங்ககிரி காவல் நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலையத்தில் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி காவல் நிலையத்தில் சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சங்ககிரி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்கள், குற்றப் பதிவேடுகள், வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறித்த ஆவணங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

சங்ககிரி உள்கோட்ட காவல் கண்காணிப்பாளா் ரமேஷ், ஆய்வாளா் முத்துசாமி, உதவி காவல் ஆய்வாளா் செந்தாமரைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா். இதனையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றை நட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.