வாழப்பாடி அரசு மருத்துவமனையில் வெறிநோய் தடுப்பூசி இல்லாததால் மக்கள் அவதி
வாழப்பாடி பகுதியில் தெருநாய் கடித்ததில் கர்ப்பிணிப்பெண், 4 வயது சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

வாழப்பாடியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள்.

வாழப்பாடியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள்.
வாழப்பாடி பகுதியில் தெருநாய் கடித்ததில் கர்ப்பிணிப்பெண், 4 வயது சிறுவன் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் வெறிநோய் தடுப்பூசி இல்லாததால், சேலத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவதால், நாய் கடியால் பாதிக்கப்படும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாழப்பாடி பேரூராட்சியில் புற்றீசல்கள் போல தெருவோரத்தில் ஆடு, கோழி பன்றி இறைச்சி, மீன் விற்பனை கடைகளும், சில்லி சிக்கன், பீப் வறுவல் கடைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பிரதான கடைவீதி மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் கூட காணப்படுகின்றன.
இதனால், சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து நாய்கள் வாழப்பாடிக்கு படையெடுத்து வருவதால் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால், இரவு பகல் முழுவதம் குடியிருப்புப் பகுதிகளில் தெருக்கள் தோறும் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் தெருச்சாலைகளில் நடந்து செல்பவர்கள் மட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் செல்வோர்களையும் ஆவேசத்தோடு கடிக்கத் துரத்தி வருவதால் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
வாழப்பாடி பேரூராட்சி 13வது வார்டு பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் துரத்தி கடித்ததில், கடந்த இரு தினங்களில் மட்டும் கர்ப்பிணியான ஜோதிகா(22). 4 வயது சிறுவன் மகி, 10 வயது சிறுவன் ஸ்ரீனிவாஸ். பத்மநாபன் (55). விஜயலட்சுமி (27). மலர்கொடி (40). ஆகிய 6 பேர் காயமடைந்தனர். இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிறுவர்–சிறுமியரை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதை தவிர்த்து வருகின்றனர்.
நாய்க்கடித்ததால் பாதிக்கப்பட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு செல்பவர்களிடம், வெறிநோய் ரேபீஸ் வேக்சின் தடுப்பூசி மருந்து இருப்பு இல்லையெனக்கூறும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள், சேலம் அல்லது ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தெரிவித்து வருகின்றனர்.
இதனால், கரோனா தொற்று பரவும் நேரத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளோர் சேலம் மற்றும் ஆத்துாருக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் அலைகழிப்புக்குள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து வாழப்பாடி தி.மு.க. இளைஞரணி நிர்வாகி மணி கூறியதாவது: தாலுக்கா தலைமையிட மருத்துவமனையான வாழப்பாடி அரசு மருத்துவனையில் வெறிநோய் தடுப்பு மருந்து இருப்பு வைத்து சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால், கரோனா தொற்று பரவும் தருணத்தில் பொதுமக்கள் அலைகழிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு போதிய அளவிற்கு தடுப்பூசி இருப்பு வைத்துக்கொண்டு, பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, வாழப்பாடி பேரூராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தவும், மனிதர்களை கடித்து துன்புறுத்தும் தெருநாய்களை அப்புறப்படுத்தவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உயரதிகாரிகளிடம்ல பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவித்துள்ளோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...