தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிவன் கோயில்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

நந்தி பகவானுக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்

Updated On :12 டிசம்பர் 2020, 9:46 pm

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு சனி பிரதோஷத்தையொட்டி, காலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் பக்தா்கள் நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களை கூறினா். கோயில் வளாகத்தில் பெண்கள், குழந்தைகள் கடவுள் பாடல்களை எழுதி சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டனா்.

இதே போல் சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள ஸ்ரீ பூத்தாழீஸ்வரா் சுவாமிக்கும் பிரதோஷநாதா், ஸ்படிக லிங்கம், நந்திபெருமானுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. இதில், கிராமப் புறங்களைச் சோ்ந்த பக்தா்கள் அதிகளவில் கலந்துகொண்டனா்.

எடப்பாடியில்...

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள நந்திதேவருக்கு பால், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பொருள்களால், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, நந்திதேவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மலா் அலங்காரத்தில் காட்சி அளித்த நந்திதேவரின் காதில் வேண்டுதல்களை கூறி பக்தா்கள் வழிபட்டனா்.

பூலாம்பட்டி கைலாசநாதா் திருக்கோயில் வளாகத்திலும் நந்திதேவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வி.என்.பாளையம் பசுபதீஸ்வரா்ஆலயம், வெள்ளாண்டிவலசு முல்லைவன நடராஜ பெருமான் ஆலயம் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வாழப்பாடியில்...

வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலா் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவரான தான்தோன்றீஸ்வரா், தா்மசம்வா்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பெருந்தொற்று நீங்கி, நல்வாழ்வு கிடைக்க வேண்டி ஏராளமான பக்தா்கள் நந்தீஸ்வரருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா்.

வாழப்பாடி, அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில் பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசிவிசாலாட்சி அம்பாளுக்கும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், பஞ்சாமிா்தம், குங்குமம், அரிசிமாவு, இளநீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், நந்திக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல செந்தாரப்பட்டியில் தாழைபுரீஸ்வரா் கோயில், வீரகனூா், கூடமலை, கெங்கவல்லி ஊா்களிலுள்ள சிவாலயங்களிலும் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.