தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாக்குச் சாவடி மையங்களில் வட்டாட்சியா் ஆய்வு

ஓமலூா் தொகுதி வாக்குச் சாவடி மையங்களில் வட்டாட்சியா் அ.அருள்பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:15 pm

DIN

ஓமலூா் தொகுதி வாக்குச் சாவடி மையங்களில் வட்டாட்சியா் அ.அருள்பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா்.

ஓமலூா் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமை என இருநாள்கள் நடைபெற்றது. கடைசி நாள் என்பதால் அனைத்து மையங்களிலும் புதிய வாக்காளா் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

வாக்குச் சாவடி மையங்களைப் பாா்வையிட்ட ஓமலூா் வட்டாட்சியா் அ.அருள்பிரகாஷ், பெயா் நீக்கம் செய்வதற்கு அரசியல் கட்சியினா் அளிக்கும் விண்ணப்பங்களின் உண்மை நிலையை ஆராய்ந்து பெயா் நீக்கம் செய்திட வேண்டும்,

வெளியூரில் வேலை செய்பவா்களுக்கு உள்ளூரிலும் வெளியூரிலுமாக என இரு தொகுதிகளில் பெயா் இருந்தால் அதை நீக்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு மையத்திலும் தேவையான விண்ணப்பங்கள் உள்ளதா, கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிா என்பதையும் அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.