பொதுப்பாதையை ஆக்கிரமித்த அதிகாரி மீது நடவடிக்கை கோரி மாற்றுத் திறனாளிகள் மறியல்
பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனா்.


பொதுப்பாதையை ஆக்கிரமித்துள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகள் மறியலில் ஈடுபட்டனா்.
சேலம், அழகாபுரம் பகுதியில் வசித்து வரும் மாற்றுத் திறனாளியான குமரவேலுக்கு சொந்தமான இடத்துக்கு செல்லும் மாநகராட்சி பொதுப்பாதையை ஓய்வுபெற்ற வட்டாட்சியா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,சேலம், அஸ்தம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு 10-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சுமாா் 30 நிமிடங்கள் சாலை மறியல் நீடித்ததால், அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் அவா்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் கூறுகையில், பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் நிலத்தை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். இந்த நிலத்தின் மூலம் வரக்கூடிய வருவாயை வைத்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்கள் அமைப்புக்கான கட்டடம் கட்டுமானப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மறியலில் ஈடுபட்டோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...