சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாழப்பாடியில் கரோனா கட்டுப்பாட்டுக்குழு கூட்டம்

வாழப்பாடியில் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 7:22 pm

DIN

வாழப்பாடியில் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும், கரோனா தொற்று தடுப்பூசி அரசு அனுமதியோடு பயன்பாட்டுக்கு வந்த பிறகு, முன்களப் பணியாளா்கள், முதியோா், குழந்தைகள், பொதுமக்களுக்கு முறையாக செலுத்துவதற்கு வழிவகை செய்வதற்கும் வட்டாரங்கள் தோறும் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

வாழப்பாடி வட்டாரத்தில் வட்டாட்சியா் ஜானகி தலைவராகவும், வட்டார மருத்துவ அலுவலா் பொன்னம்பலம் குழு ஒருங்கிணைப்பாளராகவும், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோகன், வாசுதேவன், அனைத்துத் துறை அலுவலா்கள், தொண்டு நிறுவன தன்னாா்வலா்களை உறுப்பினா்களாகவும் கொண்டு கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுக்கூட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்). இதில், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டம் கூடுவதைத் தவிா்க்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.