தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தம்மம்பட்டியில் டிராக்டர்களால் தார்ச்சாலை சேதம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு!

தம்மம்பட்டியில் பல லட்சம் ரூபாயில் போடப்பட்ட, தார்ச்சாலையில், கேஜ்வீலுடன் செல்லும் டிராக்டர்களால், தார்ச்சாலை சேதமடைகிறதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:03 am

DIN

தம்மம்பட்டியில் பல லட்சம் ரூபாயில் போடப்பட்ட, தார்ச்சாலையில், கேஜ்வீலுடன் செல்லும் டிராக்டர்களால், தார்ச்சாலை சேதமடைகிறதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில், பிரதமரின் கிராமச்சாலைகள் பராமரிப்புத் திட்டத்தில், பனந்தோப்பு தொடக்கப்பள்ளி முதல் வாழக்கோம்பை, சேரடி வரை உள்ள 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.40.96 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. 

தற்போது, இப்பகுதியில், டிராக்டர் மூலம் உழவுப்பணி நடைபெறுகிறது. அதில், நன்ஞ்செய் எனப்படும் சேறு உழவுக்காக, டிராக்டர்களில் இரும்பு சக்கரங்கள் (கேஜ் வீல்) பொறுத்தி ஓட்டிவருகிறார்கள். 

Story image

அப்போது, ஒரு வயலில் உழவு முடித்தபின், கேஜ் வீலை கழற்றிவிட்டு, டயரை பொறுத்திக் கொண்டுதான், தார்ச்சாலையில் செல்லவேண்டும். ரோடு சேதமடையும் என்பதால். கேஜ்வீலுடன் தார்ச்சாலையில் செல்லக்கூடாது என, வாகனச்சட்டத்தில் உள்ளது.

ஆனால், பனந்தோப்பு தொடக்கப்பள்ளியில் இருந்து நேருநகர் செல்லும் தார்ச்சாலையில், கேஜ் வீலுடன் ஓட்டப்படும் உழவு டிராக்டர்களால், அப்பகுதி தார்ச்சாலைகள் சேதமடைந்து உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.