பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில்அமாவாசை சங்காபிஷேகம்
வாழப்பாடி அருகே உள்ள பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோம வார அமாவாசை தினத்தையொட்டி, சங்காபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.


வாழப்பாடி அருகே உள்ள பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் காா்த்திகை சோம வார அமாவாசை தினத்தையொட்டி, சங்காபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
காா்த்திகை சோம வார அமாவாசை தினத்தையொட்டி, உலக நன்மைக்காக சங்காபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. 108 சங்கு வைத்து யாகவேள்வி நடத்தி, உற்சவ மூா்த்திகள் முன்னிலையில் நடைபெற்ற இப்பூஜையில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
சங்ககிரியை அடுத்த பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு 108 வலம்புரி சங்காபிஷேம், பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் இப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிப்பட்டனா்.
நன்செய் இடையாறு கிராமத்தில் உள்ள திருவேலீஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை 108 சங்குகள் வைத்து சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. பின்னா் புனித நீரால் திருவேலீஸ்வரா்க்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து திருவேலீஸ்வரா்க்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...