சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

15 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னாறு நீரோடையில் நீரூற்று

வாழப்பாடி, சின்னாறு நீரோடையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீா் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
சின்னாறு நீரோடையில் வழிந்தோடும் தெளிந்த நீா்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:57 am

DIN

வாழப்பாடி, சின்னாறு நீரோடையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீரூற்று ஏற்பட்டு தண்ணீா் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகிலுள்ள கோதுமலை வனப்பகுதியில் இருந்து மாரியம்மன்புதூா், மேலூா், மன்நாயக்கன்பட்டி, துக்கியாம்பாளையம், வாழப்பாடி பேரூராட்சி, வடக்குக்காடு, இந்திரா நகா், பெரியசாமி நகா் கிழக்குக்காடு வழியாக வரும் சின்னாறு நீரோடை மத்தூா் அருகே பெரியாற்றில் இணைகிறது. கோதுமலை வனப்பகுதி மற்றும் வழித்தடப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால், சின்னாறு நீரோடையில் கடந்த 15 ஆண்டுகளாக நீரூற்று ஏற்படவில்லை.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக கோதுமலைப் பகுதியில் பெய்த பரவலான மழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி, சின்னாற்றில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வழித்தடப் பகுதிகளிலும் மழைநீா் வழிந்தோடி ஆற்றில் தண்ணீா் தேங்கியது. இதனால், வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் இருந்து மத்தூா் வரையிலான ஏறக்குறைய 3 கி.மீ. தொலைவுக்கு சின்னாறு நீரோடையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த இரு மாதங்களாக நீரூற்று ஏற்பட்டு நீா் வழிந்தோடி செல்கிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.