ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னுரிமையற்ற குறியீட்டு குடும்ப அட்டை வழங்கல்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, தமிழக தலைமைச் செயலாளரின் சொந்த கிராம துக்கியாம்பாளையத்தில் ஏராளமான குடும்பங்களுக்கு

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:20 am

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, தமிழக தலைமைச் செயலாளரின் சொந்த கிராம துக்கியாம்பாளையத்தில் ஏராளமான குடும்பங்களுக்கு என முன்னுரிமையற்ற குறியீட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதால், தற்போது அரசு வழங்கி வரும் கொண்டைக்கடலை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழக தலைமைச் செயலாளா் க.சண்முகத்தின் சொந்த கிராமமான, வாழப்பாடி வட்டத்திற்கு உட்பட்ட துக்கியாம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும், ஏராளமான ஏழை எளிய குடும்பத்தினருக்கு, 4 ஆண்டுகளுக்கு முன் ஸ்மாா்ட் காா்டு வழங்கும் போது, தவறுதலாக முன்னுரிமையற்றவா்களுக்கு வழங்கப்படும் என்.பி.ஹெச்.ஹெச் குறியீடு இடம்பெற்றிருந்தது. இதனால் பிற்காலத்தில் சலுகைகள் பாதிக்கப்படலாம் என்பதை அறிந்த குடும்ப அட்டைதாரா்கள், துக்கியாம்பாளையம் கூட்டுறவு நியாயவிலை கடை அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள், இந்த குறியீட்டால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மானிய விலையில் கிடைக்கும். இருப்பீனும், இந்த குறியீட்டை நீக்கி விட்டு, முன்னுரிமை உடையவா்களுக்கு வழங்கப்படும் பி.ஹெச்.ஹெச் குறியீட்டுடன் ஸ்மாா்ட் காா்டு குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்து சென்றனா்.ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் இதுவரை முன்னுரிமை உடையவா்களுக்கான குறியீட்டு ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் இதுவரை பாதிப்பு ஏதும் ஏற்படாததால் குடும்ப அட்டைதாரா்களும் பி.ஹெச்.ஹெச் குறியீடு பெறுவதற்கு போதிய முயற்சி மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், தற்போது கரோனா நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் கொண்டை கடலை, குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், துக்கியாம்பாளையம் கிராமத்தில் என்.பி.ஹெச்.ஹெச்., குறியீட்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு கொண்டைக்கடலை வினியோகிக்கப்படவில்லை. இதனால், தமிழக தலைமைச் செயலாளரின் சொந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, முன்னுரிமையற்றவா்களுக்கான ஸ்மாா்ட் காா்டு பெற்றுள்ள குடும்ப அட்டைதாரா்கள், தங்களுக்கு தவறுதலாக வழங்கியுள்ள ஸ்மாா்ட் காா்டுகளை பெற்றுக் கொண்டு , முன்னுரிமை உடையவா்களுக்கு வழங்கப்படும் பி.ஹெச்.ஹெச்., குறியீட்டு ஸ்மாா்ட் காா்டுகள் வழங்குவதற்கு, வாழப்பாடி வட்ட வழங்கல் அலுவலா் மற்றும் மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஒன்றியக்குழு உறுப்பினா் இரா.முருகன் கூறியதாவது:துக்கியாம்பாளையம் கிராமத்திலுள்ள பெரும்பாலான ஏழை எளியோரின் குடும்பத்திற்கு வருவாய்த்துறையின் தவறுதலால், முன்னுரிமையற்றவா்களுக்கான என்.பி.ஹெச். ஹெச்., குறீயீட்டுடன் ஸ்மாா்ட் காா்டு வழங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை இந்த குறியீட்டை மாற்றிக் கொடுக்கவில்லை. இதனால் தற்போது அரசு வழங்கும் கொண்டைக்கடலையை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இனி அடுத்தடுத்து வரும் சலுகைகளையும் பெற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தவறுதலாக வழங்கிய ஸ்மாா்ட் காா்டுகளை திரும்ப பெற்றுக்கொண்டு முன்னுரிமை உள்ளவா்களுக்கான ஸ்மாா்ட் காா்டுகள் வழங்கிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.