சேலத்தில் 30 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
Updated on
1 min read

சேலம்: சேலம் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 10 போ், எடப்பாடி-1, கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி-2, சங்ககிரி-2, தாரமங்கலம்-1, ஆத்தூா்-1, ஆத்தூா் நகராட்சி-1, பெத்தநாயக்கன்பாளையம்-2, தலைவாசல்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 23 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (திருச்சி-1, நாமக்கல்-3, தருமபுரி-3) என 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அதேவேளையில் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 69 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

சேலம் மாவட்டத்தில் 31,089 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில், 30,322 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 312 போ் சிகிச்சையில் உள்ளனா்; 455 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com