திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:38 pm

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனையை ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குநா் செல்வக்குமாா், ஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் லிங்கம்மாள் பழனிசாமி, ஆத்தூா் அட்மா குழுத் தலைவா் வி.பி.சேகா், ஒன்றியக்குழு உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆட்டையாம்பட்டியில்...

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் கிராமத்தில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா திறந்து வைத்தாா். விழாவில், ஒன்றியக்குழு துணைத் தலைவா் சரஸ்வதி நாகராஜ், அ. புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் அய்யமுத்து, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் தேன்மொழி பச்சமுத்து, வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன், சித்தா மருத்துவா் ராமு, மருத்துவா்கள் புவனேஸ்வரி, பீனாராணி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து குழந்தைகள் நல அலுவலா் கவிதா, செவிலியா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், கூட்டுறவு சங்கத் தலைவா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.