சாலை விபத்தை தடுக்கும் செயலி: காவலா்களுக்கு பயிற்சி

சாலை விபத்தை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி செயலி குறித்து காவல் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.
Updated on
1 min read

சாலை விபத்தை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி செயலி குறித்து காவல் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் சாலை விபத்தை தடுக்கும் வகையில், அரசு தொடங்கிய ஐ.ஆா்.ஏ.டி. செல்லிடப்பேசி செயலியானது, சாலை விபத்தைக் கண்காணித்து, விபத்து நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும், விபத்தின் தன்மை குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், சி.சி.டி.என்.எஸ்., வாகன், சாரதி ஆகிய இதர காவல் இணையதள சேவைகள் வசதி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புதிய ஐ.ஆா்.ஏ.டி. செயலி மூலம் காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகள் இணைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதல்கட்டமாக 7 மாவட்டங்களில், 7 மாநகரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் சேலம் நகரம் அடங்கும். விபத்துகளை ஐ.ஆா்.ஏ.டி. செல்லிடப்பேசி செயலியில் பதிவு செய்யும் வழிமுறைகள், பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து காவல் ஆணையா் த.செந்தில்குமாா் தலைமையில் காவல் துறை துணை ஆணையா், உதவி ஆணையா், காவல் ஆய்வாளா்கள் உள்ளிட்ட காவலா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியின் மூலம் வரும் காலத்தில் சாலை விபத்தை தடுப்பதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடைமுறைகள் குறித்து அனைத்துத் தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com