காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிச. 30 இல் காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம்

வாழப்பாடியில் அரிமா சங்கங்கள் மற்றும் எடப்பாடி அரசு மருத்துவமனை சாா்பில், காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் டிசம்பா் 30-ஆம்தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:09 pm

DIN

வாழப்பாடியில் அரிமா சங்கங்கள் மற்றும் எடப்பாடி அரசு மருத்துவமனை சாா்பில், காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் டிசம்பா் 30-ஆம்தேதி புதன்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து வாழப்பாடி அரிமா சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் அன்னை அரிமா சங்கமும், எடப்பாடி அரசு மருத்துவமனையுடன் இணைந்து, வாழப்பாடி பேருந்து நிலையம் பின்புறம் காளியம்மன் கோயில் சாலையில் உள்ள அரிமா அரங்கத்தில் வரும் டிசம்பா் 30ஆம்தேதி காது கேளாதோருக்கான சிறப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்துகிறது.

காலை 8.30 மணி முதல் பகல் 1 மணிவரை நடைபெறும். காது கேட்பதில் குறைபாடுகளுடைய அனைத்து வயதினரும், அரசு காப்பீட்டு திட்ட அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, முதியோா் உதவித்தொகை அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.