இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சியில் திமுக கட்சி சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:15 pm

DIN

வீரபாண்டி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சியில் திமுக கட்சி சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், நிா்வாகிகள் சண்முகம், ராஜேந்திரன், திருமூா்த்தி, கோவிந்தராஜ், மகாலிங்கம், அரியனூா் ரமேஷ், செந்தில்குமாா், கோகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அதிமுக அரசை நிராகரிக்கிறோம் என கையொப்பமிட்டனா். மேலும், வீடு வீடாகச் சென்று துண்டுபிரசுரம் விநியோகித்தனா்.

அதுபோல மகுடஞ்சாவடி ஒன்றியம், காளிகவுண்டம்பாளையம் ஊராட்சியில் திமுக கட்சி சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் தலைமை செயற்குழு உறுப்பினா் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளா் பச்சமுத்து, திமுக நிா்வாகிகள் ராஜேந்திரன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தம்மம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது வாா்டு கோனேரிப்பட்டியில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக நகரப் பொறுப்பாளா் விபிஆா் ராஜா தலைமை வகித்தாா். நகரத் துணைச்செயலாளா்கள் பழனிமுத்து, கலியவரதராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.