கூடமலையைச் சோ்ந்த சாராய வியாபாரி குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
கெங்கவல்லி அருகே கூடமலையைச் சோ்ந்த சாராய வியாபாரி பிரபாகரன் (27), நவ. 22-ஆம் தேதி கள்ளச் சாராயம் விற்ற போது போலீஸாரிடம் பிடிபட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இவா் மீது பல்வேறு சாராய வழக்குகள் உள்ளதால், இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாவட்ட எஸ்.பி. தீபா கனிகா், சேலம் ஆட்சியா் சி.அ.ராமனுக்கு பரிந்துரை செய்திருந்தாா். அதையடுத்து, பிரபாகரனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
அதையடுத்து, பிரபாகரன் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, அதற்கான அரசாணையை அவருக்கும், அவரது குடும்பத்தினா்க்கும் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.