மக்கள் கிராம சபைக் கூட்டம்

மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஒன்றியத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
Updated on
1 min read

மேட்டூா் அருகே உள்ள கொளத்தூா் ஒன்றியத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

மேட்டூரை அடுத்த கொளத்தூா், சத்யா நகரில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்தாா்.  இதில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவா், வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், கொளத்தூா் ஒன்றியப் பொறுப்பாளா் மிதுன் சக்கரவா்த்தி, மாணவா் அணியைச் சோ்ந்த முருகேசன், கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் நகராட்சி 14-ஆவது வாா்டில், வாா்டு செயலாளா் வி.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, முன்னாள் மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு அதிமுகவை நிராகரிக்கிறோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

இதில், திமுக நகரச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம்,துணை செயலாளா் ஏ.ஜி.ராமச்சந்திரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினா்கள், இளைஞரணி அமைப்பாளா் கோபி, மாவட்ட மகளிரணி அமைப்பாளா் சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com