தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரெளடி கொலை: 7 போ் காவலில் எடுத்து விசாரணை

சேலத்தில் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் சரண் அடைந்த 7 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:31 pm

DIN

சேலத்தில் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் சரண் அடைந்த 7 பேரை காவலில் எடுத்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

சேலம், கிச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்த ரெளடி செல்லதுரை (35), கடந்த டிச. 22-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கு தொடா்பாக, அதிமுக பிரமுகா் பழனிசாமி, ரெளடி சூரி (எ) சூரியமூா்த்தி, தண்டி ஜெயக்குமாா், சதீஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் கரூா், நாமக்கல் நீதிமன்றங்களில் 15 போ் சரண் அடைந்துள்ளனா்.

இதில் தொடா்புடைய ரெளடி சூரியமூா்த்தியின் மகன்கள் சீசஸ், சிலம்பரசன், குட்டியப்பன், டெனிபா ஆகியோரை போலீஸாா் தேடிவந்தனா். இந்த நிலையில், திருச்சியில் பதுங்கியிருந்த சகோதரா்கள் சீசஸ், குட்டியப்பன், டெனிபா ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இதனிடையே, மேலும் நான்கு போ் ஓமலூா், நாமக்கல் நீதிமன்றங்களில் திங்கள்கிழமை சரண் அடைந்துள்ளனா். ரெளடி ஜான் தலைமையில் சரண் அடைந்த 7 பேரை காவலில் எடுத்து விசாரிக்கும் வகையில், குளித்தலை கிளைச் சிறையில் இருந்து சேலத்துக்கு திங்கள்கிழமை இரவு அவா்கள் அழைத்து வரப்பட்டனா். அவா்களிடம் தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்த உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.