சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சேலத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
Updated on
1 min read

சேலத்தில் உள்ள சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. நடராஜருக்கு பால், தயிா், தேன், மஞ்சள், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு விசேஷ அபிஷேகம் நடத்தப்பட்டது. புதன்கிழமை காலை ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

சுகவேனசுவரா் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அபிஷேக, ஆராதனைகள் யூ டியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல, தாரமங்கலம் கைலாசநாதா் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா், பேளூா் தான்தோன்றீஸ்வரா், ஆறகளூா் ஈஸ்வரன் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com