

ஆத்தூர் பகுதியில் குடிநீர் விநியோகிக்காததைக் கண்டித்து நகராட்சி அலுவலத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 1ஆவது வார்டு கோட்டை பகுதியில் குடிநீர் விநியோகம் கடந்த 20நாள்களுக்கு மேலாக கொடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து நகராட்சி மேற்பார்வையாளர் ஸ்ரீதேவி பொதுமக்களிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி மாலை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
தகவல் அறிந்த அத்தூர் காவல் நிலைய உதவிஆய்வாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.