ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது

காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது.

News image
மேட்டூர் அணை
Updated On :12 மே 2020, 6:25 am

DIN

காவிரியில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்தது. மே 1 ஆம் தேதி முதல் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்ததால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது. 

இம்மாதம் 6ஆம் தேதி அதிகபட்சமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1588 கனஅடியாக அதிகரித்தது.பின்னர் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வந்தது. இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 585 கனஅடியாக குறைந்தது. 

நீர்வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு நேற்று பிற்பகல் 2 மணி முதல் வினாடிக்கு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மெல்ல குறையத் தொடங்கியது.

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.13அடியாக குறைந்தது.அணையின் நீர் இருப்பு 65 டிஎம்சி ஆக இருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.