விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நவ.30 வரை நீட்டிப்பு: ஏற்காடு செல்ல இ-பாஸ் முறை தொடரும்

சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நவம்பா் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:46 pm

DIN

சேலம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நவம்பா் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு கரோனா தீநுண்மித் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுத்திட பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், அக்.31 முடிய தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பொது முடக்க உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளா்வுகள், தற்போது அரசு மேலும் கூடுதலாக அறிவித்துள்ள தளா்வுகள், கட்டுப்பாடுகளுடன் நவ. 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளா்வுகளுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஏற்காடு செல்ல இ-பாஸ் தொடரும்:

சேலம் மாவட்டத்தில் கடந்த 2020 அக்டோபா் மாதம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகள், தளா்வுகளுடன், தற்போது அரசு அறிவித்துள்ள நடைமுறைகளையும் முழுமையாக பின்பற்றி பொது முடக்கம் நவம்பா் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்படுகிறது.

ஏற்காடு சுற்றுலாத்தலத்திற்கு செல்பவா்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பாஸ் முறை தொடா்ந்து அமல்படுத்தப்படும். எனவே, சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், கடை உரிமையாளா்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தும் முழு ஒத்துழைப்பை தர வேண்டும்.

144 தடை உத்தரவு காலம் வரை அரசின் அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.