விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேவூர் பகுதிகளில் நெல் வயலில் களையெடுப்புப் பணி

சங்ககிரி வட்டம், தேவூர் வருவாய் உள்வட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் விவசாயிகள் களர் செடிகளை சனிக்கிழமை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

News image
மோட்டூர் பகுதியில் நெற்பயிர்களுக்கு நடுவு வளர்ந்துள்ள களைசெடிகளை அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டுள்ள விவசாயகூலித்தொழிலாளர்கள்.
Updated On :7 நவம்பர் 2020, 12:17 pm

DIN

சங்ககிரி வட்டம், தேவூர் வருவாய் உள்வட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் விவசாயிகள் களர் செடிகளை சனிக்கிழமை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கரை வாயில்களில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து கிழக்குக்கரை நீர்ப்பாசன வாய்க்காலுக்கு உட்பட்ட அரசிராமணி செட்டிபட்டி, குள்ளம்பட்டி, தேவூர், காவேரிப்பட்டி, வட்ராம்பாளையம், மோட்டூர், சென்றாயனூர், கே.மேட்டுப்பாளையம், பூமணியூர் ஆகிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் விவசாயிகள் டிகேஎம் 13, கோ 51, ஆடுதுறை 45, வெள்ளை பொன்னி,  தனுஷ்கா, காவேரி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட பல்வேறு ரகங்களையும் நடவு செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து நெற்பயிர் வளர்ச்சிக்காக உரமிடுதல் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது நெற்பயிரின் இடையே களைகள் அதிகரித்துள்ள நிலையில் களை எடுக்கும் பணிகளிலில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களைக்கொண்டு அகற்றும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட கோனேரிப்பட்டி,  கோனேரிப்பட்டி அக்ரஹாரம், காவேரிப்பட்டி, காவேரிப்பட்டி அக்ரஹாரம், புள்ளாகவுண்டம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், தேவூர் உள்ளிட்டபகுதிகள் முழுவதும், அரசிராமணி பிட் - 1 , அரசிராமணி பிட் - 2 ஆகிய பகுதிகளில் பகுதி மட்டும் காவிரி ஆற்றங்கரையையொட்டி உள்ளன.  இக்கிராமங்களில் விவசாயிகள் கிழக்குகரை கால்வாய் பாசன நீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்ததையடுத்தும், கடந்த ஆண்டு தொடர்ந்து மேட்டூர் அணை  4 முறை நிரம்பியது. இதனையடுத்து கிணறு, குளம், குட்டை, ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளன.  அதனையடுத்து மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு சராசரியாக 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதில் சராசரியாக நாள் ஒன்று 600  கன அடி தண்ணீர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது.  

கடந்த சில வருடங்களாக மழை பெய்யாததால்  விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல்  சிரமத்திற்குள்ளாகி வந்தனர். நிகழாண்டு அதிகளவு பெய்து வருவதாலும், நிலத்தடி நீர்  உயர்ந்தும், கிழக்குகரை கால்வாய் பாசனத்தில் தண்ணீர் தொடர்ந்து சராசரி 600 கன அடிக்கு மேல் வருவதால்  விவசாயிகள் நிகழாண்டு 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இவை கடந்த ஆண்டை விட 700 ஏக்கர் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். டிகேஎம் 13, கோ 51, ஆடுதுறை 45, வெள்ளை பொன்னி,  தனுஷ்கா, காவேரி, ஆந்திரா பொன்னி உள்ளிட்ட பல்வேறு ரகங்களையும் விதைத்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் வளர்ந்ததையடுத்து தை மாத பொங்கல் பண்டிகைக்கு அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  தண்ணீர் தொடர்ந்து விவசாயத்திற்கு கிடைத்ததையடுத்து கடந்த ஆண்டை விட நிகழாண்டு ஒரு ஏக்கருக்கு சராசரியாக 3 முதல் 5 மூட்டை நெல் அதிகமாக கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய் மூலம் தண்ணீர் தொடர்ந்து திறந்து விட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். 

சங்ககிரி பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக முதல்கட்ட நெல் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட  காவேரி பட்டி கிராமம் மோட்டூர் பகுதியில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக முதல் கட்ட நெல்  அறுவடை பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேட்டூர் அணையின் கிழக்குக்கரை வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்டது. சங்ககிரி பகுதியில் மொத்தமுள்ள 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இதனை அடுத்து சங்ககிரி அருகே உள்ள காவேரி பட்டி கிராமம் மோட்டூர் பகுதியில் முதல்கட்ட நெல் அறுவடை பணி மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதில் பல வகையான நெல் ரகங்கள் பயிரிடப்பட்டு இருந்தன. சம்பா, பொன்னி, வெள்ளைப் பொன்னி, கனிஷ்கா, ஆந்திரா பொன்னி, ஜ.ஆர் 20 ,போன்ற பல வகையான நெல் பயிரிடப்பட்டுள்ளன. எனவே இதில் முதிர்ந்து நெற்கதிர்களை பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் முதல்கட்ட நெற்கதிர்களை அறுவடை விவசாயிகள் தொடங்கியுள்ளன. 

இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் கிழக்கு கரை வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நெல்சாகுபடி அதிக மகசூல் தரும் என்ன அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.