அயோத்தியாபட்டணத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கல்
அயோத்தியாப் பட்டணம் ஊராட்சி ஒன்றியம் டி.பெருமாபாளையம் ஊராட்சி, தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர்,


அயோத்தியாப் பட்டணம் ஊராட்சி ஒன்றியம் டி.பெருமாபாளையம் ஊராட்சி, தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர்களுக்கு, ஊராட்சி மன்ற தலைவர், தனது சொந்த செலவில் வேட்டி-சேலை, இனிப்பு தீபாவளி பரிசுத் தொகுப்புகளை ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
வாழப்பாடி அடுத்த அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றியம், டி.பெருமாபாளையம் ஊராட்சியில், தூய்மை பணியாளர்கள், குடிநீர் தொட்டி இயக்குனர்கள் ஆகியோர் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
ஊராட்சியில் பணிபுரிந்து வரும் அனைத்து பணியாளர்களுக்கும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வேட்டி-சேலை, இனிப்பு மற்றும் ஊக்கத்தொகை உள்ளிட்ட பரிசுத் தொகுப்புகளை, தி.மு.க.வை சேர்ந்த, டி. பெருமா பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் (எ) சாமிநாதன், ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த செலவில் வழங்கினார்.
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தாமரைச்செல்வி, ராமன், குமார் சரன்ராஜ், ரேவதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...