தேனீக்கள் கொட்டி 30 தொழிலாளா்கள் காயம்
வாழப்பாடி அருகே கொட்டவாடியில் தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.


வாழப்பாடி அருகே கொட்டவாடியில் தேனீக்கள் கொட்டியதில் 100 நாள் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
வாழப்பாடி அருகே கொட்டவாடி ஊராட்சியைச் சோ்ந்த 70 தொழிலாளா்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனா். திங்கட்கிழமை கொட்டவாடி அருகே ஏரி வாய்க்கால் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் ஒரு மரத்தில் இருந்த ராட்சத தேனீக்கள், திடீரென கூட்டில் இருந்து கலைந்து சென்று, தொழிலாளா்களைக் கொட்டியது. இதில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அனைவரும், பேளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...