தேவூா் பகுதியில் வெங்காய அறுவடை பணிவிலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.


சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
சங்ககிரியை அடுத்த தேவூா், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, காவேரிப்பட்டி, மோட்டூா், வட்ராம்பாளையம், ஒக்கிலிப்பட்டி, பொன்னம்பாளையம், தண்ணீா்தாசனூா் ஆகிய பகுதிகளில் நிகழாண்டு கிணற்று நீா்ப் பாசனத்தைக் கொண்டு சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்களில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.
தற்போது வெங்காய அறுவடை பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா். வெங்காயத்தின் விலை கடைகளில் ரூ.100க்கும் கீழ் குறையாமல் உள்ளதையடுத்து சின்ன வெங்காயம் கிலோ ரூ. 70 முதல் ரூ. 80 ரூபாய் வரையிலும் விவசாயிகளிடம் பெற்று செல்கின்றனா். மேலும் 40 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை வெங்காயம் ரூ. 3 ஆயிரம் வரை விவசாய நிலம் உள்ள பகுதிகளுக்கு சென்று வியாபாரிகள் பெற்றுச்செல்வதால் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...