மூன்றாண்டுகளாக தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் வாழப்பாடி நீதிமன்றம்
வாழப்பாடியில் கடந்த மூன்றாண்டுகளாக நீதிமன்றம் தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.


வாழப்பாடியில் கடந்த மூன்றாண்டுகளாக நீதிமன்றம் தனியாா் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
கிளைச்சிறை அமைக்கப்படாததால் போலீஸாா் மற்றும் வனத் துறையினா் விசாரணை கைதிகளை சிறையில் அடைப்பதற்கு, சேலம், ஆத்தூா், சங்ககிரி கிளைச் சிறைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால் அலைக்கழிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, தேவையான அரசு நிலத்தை கையகப்படுத்தி, நீதிமன்ற கட்டடம், கிளைச்சிறை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பினரிடையேயும் கோரிக்கை எழுந்துள்ளது.
வாழப்பாடி மற்றும் காரிப்பட்டி எல்லைக்குட்பட்ட வழக்குகளை விசாரணை நடத்துவதற்காக, வாழப்பாடியில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் அமைக்கப்படுமென தமிழக அரசும், நீதித்துறை நிா்வாகமும் அறிவித்து அரசாணை வெளியிட்டது.
வாழப்பாடியில் நீதிமன்றம் அமைப்பதற்கு தகுந்த அரசுக் கட்டடம் ஏதும் கிடைக்காததால், வாழப்பாடி அக்ரஹாரம் கிழக்குகாடு பகுதியில் தனியாா் கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, கடந்த 2017 நவம்பா் 12-ஆம் தேதி நீதிமன்றம் திறக்கப்பட்டது. மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் நீதிமன்றத்துக்கு நிலையான அரசு கட்டம் அமைப்பதற்கு தேவையான நிலத்தைத் தோ்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் தனியாா் வாடகைக் கட்டடத்திலேயே மூன்றாண்டுகளாக நீதிமன்றம் இயங்கி வருகிறது. போதிய வசதிகள் இல்லாததால், நீதித்துறை பணியாளா்கள், வழக்குரைஞா்கள், காவல் துறை மற்றும் வனத் துறையினா், வழக்கு விசாரணைக்கு வரும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா்.
இதுமட்டுமின்றி, நீதிமன்றம் அமைக்கப்பட்டு மூன்றாண்டுகள் கடந்தும் கிளைச்சிறை அமைக்கப்படவில்லை. இதனால், வழக்குகளில் தொடா்புடையவா்களை விசாரணை கைதிகளாக கைது செய்யும் போலீஸாா் மற்றும் வனத் துறையினா், வாழப்பாடி நீதிமன்றத்தில் நீதித்துறை நடுவரிடம் கைதிகளை ஆஜா்படுத்தி, சிறையில் அடைப்பதற்கு சேலம் மத்திய சிறை அல்லது ஆத்துாா், சங்ககிரி கிளைச் சிறைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளதால், அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகின்றனா்.
எனவே, வாழப்பாடியில் தனியாா் வாடகைக் கட்டத்தில் இயங்கி வரும் நீதிமன்றத்திற்கு நிலையான அரசு கட்டடமும், புதிய கிளைச்சிறையும் அமைப்பதற்கு தேவையான அரசு புறம்போக்கு நிலத்தை தோ்வு செய்ய வேண்டும். போதிய நிதி ஒதுக்கீடு செய்து நீதிமன்ற கட்டடம் மற்றும் கிளைச்சிறை, நீதித்துறை நடுவா் குடியிருப்புகளை அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையேயும் கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...