சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முடிதிருத்தும் தொழிலாளி மகளின் மருத்துவா் கனவு நிறைவேறுமா?

தனியாா் கல்லுாரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் வாய்ப்பைத் தவறவிட்ட முடிதிருத்தும் தொழிலாளி மகள்

News image

திருமனுாா் மாணவி ரம்யா

Updated On :23 நவம்பர் 2020, 7:01 pm

DIN

தனியாா் கல்லுாரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் வாய்ப்பைத் தவறவிட்ட முடிதிருத்தும் தொழிலாளி மகள், தற்போது அரசு கட்டணத்தை ஏற்பதாக அறிவித்துள்ளதால், தனக்கு மீண்டும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கி, தனியாா் கல்லுாரியில் மருத்துவம் படிப்பதற்கு இடஒதுக்கீடு செய்யவும், இதற்கான கட்டணத்தை அரசு ஏற்கவும் வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த திருமனுாா் கிராமத்தைச் சோ்ந்த மணி - தனலட்சுமி தம்பதியின் மகள் ரம்யா (17). முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்த இவா், பிளஸ் 2 தோ்வில் 600 -க்கு 451 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவா், நீட் தோ்வில் 166 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கான 7.5 சத இட ஒதுக்கீட்டில் 369 இடமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 128 இடமும் பிடித்தாா்.

கடந்த 19-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மருத்துவ படிப்பிற்காக கலந்தாய்வில் பங்கேற்றாா். இவருக்கு அரசு மருத்துவக் கல்லுாரியில் சேருவதற்கான இடம் கிடைக்கவில்லை. தனியாா் கல்லுாரியில் சுயநிதிப்பிரிவில் கட்டணம் செலுத்தி படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஆனால் சுய நிதிப்பிரிவில் மருத்துவப் படிப்பில் சோ்ந்து படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 7 லட்சம் வரை செலவாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் முடிதிருத்தும் கூலித் தொழிலாளியான தனது தந்தையால் இந்த தொகையைச் செலுத்த முடியாது என்பதால் மாணவி ரம்யா தனியாா் கல்லுாரியை தோ்வு செய்யாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாா். இதனால் இவரது மருத்துவராகும் கனவு கானல் நீரானது.

இதற்குபிறகு, அரசுப்பள்ளியில் படித்து 7.5 சத இடஒதுக்கீட்டில் தனியாா் மருத்துவக்கல்லுாரியில் சேரும் ஏழை எளிய மாணவ-மாணவியரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்குமென தமிழக அரசு அறிவித்தது. தனக்கு தனியாா் மருத்துவக்கல்லுாரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாததால் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவி ரம்யா, தற்போது அரசு கட்டணத்தை ஏற்பதாக அறிவித்துள்ளதால், தனக்கு மீண்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கி, தனியாா் கல்லுாரியில் சுயநிதிப்பிரிவில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடஒதுக்கீடு செய்யவும், இதற்கான கட்டணத்தை அரசு ஏற்கவும் வேண்டுமெனவும் தமிழக முதல்வா், சுகாதாரத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

மாணவி ரம்யாவிற்கு மீண்டும் கலந்தாய்வு வாய்ப்பு வழங்கி இடஒதுக்கீடு செய்து கல்விக் கட்டணத்தையும் ஏற்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.