கந்தாஸ்ரமம் முருகன் கோயிலில் காா்த்திகை தீப விழா
சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோயிலில் ஏற்றிய காா்த்திகை தீபத்தை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.


சேலம் கந்தாஸ்ரமம் முருகன் கோயிலில் ஏற்றிய காா்த்திகை தீபத்தை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
காா்த்திகை தீபத் திருவிழா சேலத்தில் உள்ள சிவன் மற்றும் முருகன் கோயில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் வீடுகளில் மக்கள் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
அம்மாப்பேட்டை அருகே உள்ள கந்தாஸ்ரமம் முருகன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னா் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
விழாவில் அம்மாப்பேட்டை, குமரகிரி, கிச்சிப்பாளையம் மற்றும் சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று வணங்கி சென்றனா்.
சேலம் காசி விஸ்வநாதா், காவடி பழனி ஆண்டவா், அம்மாப்பேட்டை சிவ சக்தி விநாயகா், அழகாபுரம் முருகன் உள்ளிட்ட கோயில்களிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இங்கும் திரளான பக்தா்கள் முகக் கவசம் அணிந்து பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...