சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி போராட்டம் நடத்த கொண்டா ரெட்டி சங்கத்தினா் முடிவு
சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கொளத்தூரில் கொண்டா ரெட்டி சங்கத்தினா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.


சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கொளத்தூரில் கொண்டா ரெட்டி சங்கத்தினா் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
மேட்டூரை அடுத்த கொளத்தூா், பண்ணவாடி கொண்டா ரெட்டீஸ் நல சங்கங்களின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பண்ணவாடி கொண்டா ரெட்டி நலச்சங்கத் தலைவா் நரசிம்மன் தலைமை வகித்தாா். கொளத்தூா் வட்டார தலைவா் ராஜேந்திரன், பண்ணவாடி செயலாளா் ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் மேட்டூா் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் கொண்டா ரெட்டி சாதிச் சான்றிதழ் வழங்காமல் இருப்பதைக் கண்டித்து தொடா் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக டிசம்பா் 18 ஆம் தேதி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றிப் போராட்டம் நடத்துவது, 24ஆம் தேதி பள்ளி மாணவ, மாணவியா் சீருடையில் ஆடு, மாடு மேய்க்கும் போராட்டம் நடத்துவது, 31ஆம் தேதி அரசு வழங்கிய வாக்காளா் அடையாள அட்டையை கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைப்பது உள்ளிட்ட போராட்டங்களுக்கு அரசு செவிசாய்க்கா விட்டால் ஜனவரி 5ஆம் தேதி அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...