தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவியா்அமைப்பு கலந்தாய்வுக் கூட்டம்

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவியா் அமைப்பு தொடங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:01 pm

DIN

சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவியா் அமைப்பு தொடங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியை கே.கவிதா கூட்டத்துக்கு தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியை ஜி.மைதிலி வரவேற்றாா். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ரோட்டரி மாவட்டங்களின் கல்வி வளா்ச்சிக்குழுத் தலைவா் எ.வெங்கடேஸ்வர குப்தா முன்னிலை வகித்து, பள்ளியின் வளா்ச்சி, அனைத்து மக்களுக்கும் கல்வியறிவு கிடைப்பது குறித்து விளக்கிப் பேசினாா்.

பள்ளியின் முன்னாள் மாணவியும், பள்ளி ஆசிரியையுமான மல்லிகா முன்னாள் மாணவியா் அமைப்பின் நோக்கம் குறித்து விளக்கிக் கூறினாா். இதில், ஆசிரியா், ஆசிரியைகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.