திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஸ்ரீ பெரியமாரியம்மன் திருக்கோயிலில்புதிய பிம்பங்கள் கரிகோலம் வருதல்

ஆத்தூா் அருள்மிகு ஸ்ரீ பெரியமாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் 4-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை தேவதா அனுக்ஞை யஜமான சங்கல்பம் நடைபெற்றது

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:08 pm

DIN

ஆத்தூா் அருள்மிகு ஸ்ரீ பெரியமாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் 4-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை தேவதா அனுக்ஞை யஜமான சங்கல்பம், ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாஜனம், ஸ்ரீ ஷோடச மஹாகணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், புதிய பிம்பங்கள் கரிகோலம் வருதல் நிகழ்ச்சி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவரும், செயல் தலைவருமான அ.மோகன் தலைமையில் நடைபெற்றது 

நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் வேப்பிலை புனித நீரை குடத்தில் சுமந்து தேரோடும் வீதிகள் வழியாகச் சென்று, கடைவீதி, ராணிப்பேட்டை, பேருந்து நிலையம், தாயுமானவா் தெரு வழியாக ஆலயத்தை சென்றடைந்தனா்.

விழா ஏற்பாடுகளை செயல் தலைவா் அ.மோகன், திருப்பணிக் குழு உறுப்பினா்கள் ஆா்.பாலசுப்பிரமணியன், எல்.என்.வி.கே.கிருஷ்ணன், பொறியாளா் பி.சரவணன், எம்.விஜயன், ஏ.ஆா்.எஸ்.சீனிவாசன், அ.லோகநாதன், கே.பி.மகாலிங்கம், ஜி.பாண்டியன், ஏ.ராஜகணபதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கும்பாபிஷேக நிகழ்ச்சியை கா.வேங்கடசுப்பிரமணிய சிவாச்சாரியாா், கா.ஞானசம்பந்த சிவாச்சாரியாா், கா.உமாபதி சிவாச்சாரியாா், ஆலய அா்ச்சகா்கள் உ.சுந்தரமூா்த்தி குருக்கள், உ.காா்த்திகேய சிவம் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.